Saturday, March 12, 2011

ஒருவாரம் ஓடிப்போச்சு; ஒழுங்கு நடவடிக்கை என்ன ஆச்சு..??



ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்..

''எங்கள் ஜமாத்தில் தவறு செய்பவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தூக்கிப் போட்டுவிடுவோம் என்று தூக்கலாக வீர வசனம் பேசும் அண்ணன் ஜமாஅத்தின் வளைகுடா மேலாண்மை நிர்வாகி ஒருவர், கடவுள் இல்லை என்ற கொள்கையை விதைத்த பெரியார் பிறந்தநாள் விழாவில் பங்கெடுத்து விருது பெற்றதோடு, கடவுள் மறுப்பாளர் பெரியாருக்கு புகழ் பாடி வாழ்த்துப்பா எழுதியதையும் மையமாக வைத்து, கடந்த 19 -02 -2011 அன்றுபெரியாருக்கு புகழ்பாடும் 'மேலாண்மை'; நடவடிக்கை எடுக்க அண்ணனுக்கு துணிவுண்டா..? என்ற தலைப்பில் கட்டுரை வடித்தோம்.




சம்மந்தப்பட்ட கட்டுரையை நாம் வெளியிட்டு ஒருவாரம் கடந்த நிலையில், ஒன்று நாம் வெளியிட்ட செய்தி பொய் என்று பீஜே மறுத்து விளக்கம் தந்திருக்கவேண்டும். அல்லது சம்மந்தப்பட்டவரை நீக்கி, அதை பகிரங்கமாக உணர்வில் வெளியிட்டு, தன்னை முதுகெலும்புள்ள தலைவர் என்று காட்டியிருக்க வேண்டும். இரண்டையும் செய்யாமல் மவுனம் சாதிப்பதன் மூலம், நாம் வைத்த குற்றச்சாட்டு உண்மை என்பதை பீஜே ஒப்புக்கொண்டுவிட்டார் என்பதும், உணமையாக இருந்தும் ஏகத்துவத்திற்காக நடவடிக்கை எடுத்து 'எண்ணெய்வயலை' இழக்க அவர் தயாரில்லை என்பதையும் காட்டிவிட்டார். அல்ஹம்துலில்லாஹ்.



தனது ஜமாஅத்தில் எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கைகள் என்பது, ஆண்டான்-அடிமை அடிப்படையிலும், தனது சொந்த விருப்பு வெறுப்பின் அடிப்பைடையிலும் தானேயன்றி, கொள்கை அடிப்படையில் அல்ல என்பதை மீண்டும் பீஜே காட்டிவிட்டார்.


'நீதி வழங்கிறலாம்; ஆனால் நீதிதான் என்று எல்லாருக்கும் தெரியனும்' என்பதெல்லாம் மேடைக்குத்தானேயன்றி செயல்பாட்டுக்கல்ல என்பதை அண்ணன் காட்டிய பின்னும், அவரை பின்பற்றும் தம்பிகளை அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும்.

No comments:

Post a Comment