Friday, August 19, 2011

TNTJ பாளை நகர செயலாளர் கைது

உண்மையான பொய்யர்கள்

Add caption


சிந்திப்பீர்! 
தாங்கள் செய்த தவறை ஒத்துக்கொள்ளாமல் ரமலான் மாதத்தில் மேலும் மேலும் பொய் கூறுகின்றனரே இவர்களா தவ்ஹித்வாதி? இவர்களா குர்ஆன், ஹதீஸ் மற்றும் பின்பற்றக்கூடியவர்கள்?
முஸ்லிம் உம்மத்தே சிந்திப்பீர்!      
--
 

Wednesday, August 17, 2011

மீண்டும் ஒரு திருவிடைசேரியை நெல்லையில் நடத்த TNTJ திட்டம்


ஆயிரம் மாதங்களுக்கு இணையான ஒரு மாதம் ரமலான் மாதம். இம்மாதம் அருட்கொடை நிறைந்த மாதம். பல்வேறு அமைப்புகள், தன்னார்வு நிறுவனங்கள், மதரஸாக்கள் தங்களின் பொருளாதார தேவைகளை. மக்களிடம் எடுத்துரைக்க பல்வேறு பள்ளிவாசலில் ஜும்ஆ பயானை கேட்டு வாங்கி தங்களது பணிகளை எடுத்துரைக்கிறார்கள். 

இவ்வாறு பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரியின் அருகிலுள்ள பிரபலமான பள்ளிவாசல் மிலிட்டரி லைன் பள்ளிவாசல். இப்பள்ளியில் புதிதாக இஸ்லாத்தை ஏற்ற மக்களுக்கு அடிப்படை இஸ்லாமிய கல்வியைபயிற்றுவிக்கும் மதரஸா வின்   சார்பில் 12/08/2011 அன்று ஜும்ஆ பயான் நடத்தினர். 

இந்த ஜும்ஆ பயானில் மதரஸா  பற்றிய தகவல்களையும் அதன் பொருளாதார தேவைகளையும் சிறப்பாக எடுத்து வைத்தனர். ஜும்ஆ நிறைவடைந்தவுடன் மதரஸாவிற்கு தேவையான பொருளாரதார உதவியை பெற்றனர் அந்த மதரசாவின் ஆலிம்கள்.


இதனை அறிந்த TNTJ வின் பாளை நகரத் தலைவர் செய்யது என்பவர் தங்களது அமைப்பிற்கும் இதுபோல ஒரு வாய்ப்பு தரவேண்டும் என்று கண்ணியமான முறையில் கேட்காமல், மிலிட்டரி லைன் பள்ளி நிர்வாகிகளை பள்ளியினுள் புகுந்து தவறான சொற்களால் பேசினர் அந்த தவ்ஹித்வாதிகள். 

இதனால் அனுமதி தர மறுத்த அந்த பள்ளி நிர்வாகிகளின் வாகனங்களை சேதப்படுத்தியது மட்டுமின்றி, அந்த பள்ளியின் நிர்வாகிகளை கொன்றுவிடுவதாக கூறியுள்ளனர்.   

இந்த சம்பவத்தை அறிந்ததும் மற்ற சமுதாய இயக்கத்தின் உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பள்ளியின் முன் அராஜகம் பண்ணிய இந்த TNTJ வின் மீது காவல்துறையிடம் புகார் அளித்தனர். TNTJ மீது தக்க நடவடிக்கை எடுப்போம் என காவல்துறையினர் உறுதியளித்தனர்.

மறுபடியும் அடுத்த நாள் வந்து எப்படி போலீசிடம் புகார் அளிக்கலாம் என்று வயதான பள்ளி நிர்வாகிகளை தாக்கி உள்ளனர்.அவர்கள் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

  கடந்த ரமலான் மாதத்தின் சங்கைமிகு இறுதி பத்தில் திருவிடைச்சேரி பகுதியில்  பள்ளிவாசல் பிரச்சனையில் ஜமாத்தார்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தி கொலைவெறி தாக்குதல் நடத்தினர் TNTJ வினர். இதனால் அப்பகுதியை சேர்ந்த இரண்டு முஸ்லிம்கள் வபாத்தானார்கள். இவ்வாண்டு பாளை மிலிட்டரி லைன் பள்ளிவாசலில் தனது அராஜக போக்கை கையாளுகின்றனர்.

 ஏகத்துவத்தின் பெயரால் பல வருடங்களாக முஸ்லிம்களிடமும், பள்ளிவாசல்களிலும் பிரச்சனைகளை ஏற்ப்படுத்துவதுதான் உண்மையான தவ்ஹீதா? 

Monday, August 1, 2011

மக்களின் மார்க்க கடமைகளோடு விளையாடும் தக்லித் ஜமாத்தினர்!


                          மக்களின் மார்க்க கடமைகளோடு 
                          விளையாடும் தக்லித் ஜமாத்தினர்!

நாங்கள் தான் பரிசுத்தவான்கள் , பக்கா தவ்ஹீத் வாதிகள் , உங்கள் பித்ரா, ஜகாத், போன்றவற்றை எங்களிடம் கொடுத்தால், 'உரிய வகைகளில் மட்டுமே செலவழிப்போம்'  என உறுதி கூறி மக்களிடம் வாங்கியவர்கள்,   கடந்த வருடம் பித்ராவை வசூலித்து அதை உரிய காலத்தில் விநியோகிக்காமல் ஜகாத் நிதியில் சேர்த்து விட்டோம்! என்று எந்த அச்ச உணர்வுமின்றி கூறுகின்றனர்!

 சுமார் 4 லட்ச ரூபாயை தாமதமாக வந்ததனால், கூடுதலாக செலவழித்த மாவட்டங்களுக்கு கொடுத்தது போக மீதமான சுமார் 2  லட்சம் ரூபாயை ஜகாத் நிதியில் சேர்த்து விட்டோம் எனக் கூறுகின்றனர்!


  • ஏழைகளும் அந்த நாளில் நல்ல உணவு உண்ண  வேண்டும் என்பதற்காக கொடுக்கப்பட்ட தொகையை, அதை விட நல்ல நிலையில் உள்ள  ஜகாத் பெற தகுதியுள்ளவர்களுக்கு வழங்குவது எந்த வகையில் நியாயம் ?
  • அந்த நாளில் அந்த உணவு கிடைக்கப்  பெறாதவர்களின் நிலைக்கு யார் பதில் சொல்வது?
  • அந்த நாளின் தொழுகைக்கு முன்னதாக வழங்கப் பட வேண்டிய அந்த கடமையை நிறைவேற்றாத குற்றம் யாரை சேரும்?
  • நோன்பில் நடந்த சிறு தவறுகளை மன்னிப்பதற்காக கொடுக்கப் படவேண்டிய தர்மம் கொடுக்கப் படாததால் ருபாய் 2 லட்சம் பித்ரா தொகைக்கு உரிய  சுமார் 3000 நபர்கள் ரமலானில் செய்த சிறு தவறுகளின் மன்னிப்பிற்கு பி.ஜே. கூட்டம் பொறுப்பு ஏற்குமா?  
  • பித்ராவை ஜகாத் நிதியில் செலவழிக்க குரான் ஹதிஸ் அடிப்படையில் ஆதாரம் என்ன? எனக் கேட்டு பல நாட்கள் ஆன பின்னும் பதில் இல்லையே ஏன்?
  • மீதமான தொகையை குழி தோண்டியா புதைக்க முடியும் ? என எங்களிடம் கேட்கும் நீங்கள் பணம் கொடுத்த 3000 பேரிடம் கேட்டு முடிவெடுத்தீர்களா?

  •   பொறுப்பற்ற முறையில் ' இதுதான் முடியும் விரும்புவோர் எங்களிடம் கொடுக்கலாம்" என பதில் சொல்வது எந்த வகை நியாயம்? 
  •  இந்த வருடம் பித்ரா வசூலிக்கும் போது இந்த விளக்கத்தை சொல்லி வசூலிப்பீர்களா  ?
  • நீங்கள் கொடுக்கும் பணத்தை உரிய வகையில் செலவழிப்போம் எனும் உறுதி மொழி பணத்தை வாங்கும் வரைதானா ? 
  • அல்லாஹ்வுக்கு அஞ்சி நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என நம்பி ஒப்படைத்த மக்களின் மார்க்க கடமைகளில் விளையாடுவது முறையா ? 

இது மட்டுமல்ல! இவர்களை நம்பி குர்பானிக் கடமையை ஒப்படைக்கிறீர்கள்! பெருநாள் தொழுகைக்கு பின் தான் அறுக்க வேண்டும் என்ற மார்க்க சட்டத்தை கேலிக் கூத்தாக்கி கடந்த முறை ஆலந்தூர் பகுதியில் இவர்கள் பெருநாள் தொழுகைக்கு முன் ஆறு மாடுகளை அறுத்து குர்பானி கொடுத்துள்ளனர்! 

பள்ளிவாசல்களுக்கு பணம் கொடுக்கிறீர்கள்! அந்த [ஆவடி] பள்ளிவாசல்களில் டவுசர் போட்டு பாங்கு சொல்லி மார்கத்தை கேலிகூத்தக்குகிறனர்! கேட்டால்  டவுசர் போட்டு பாங்கு சொல்லவோ தொழவோ கூடாது என்பதற்கு ஆதாரம் தர முடியுமா? என எகத்தாளம் பேசுகின்றனர்! 

இவர்களை நம்பி ஜகாத்தை ஒப்படைக்கும் சகோதரர்களே! சற்று சிந்தியுங்கள்! 'பாதிக்கப்பட்டு இருந்தால் கூட பிற முஸ்லிம் இயக்கத்தை சேர்ந்த சகோதரருக்கு த.த.ஜ.வினர் உதவக் கூடாது'  என்பது பி.ஜே.வின் புதிய ஃபத்வா!   இதே சிந்தனைதான் இவர்களின் ஜகாத் விநியோகத்திலும் இருக்கும்!   

ஆகையால் அன்பிற்குரிய வெளிநாடு வாழ் சகோதரர்களே! உங்களின் மார்க்க கடமைகளை இவர்களிடம் ஒப்படைக்கும் முன் இந்த கேள்விகளைக் கேளுங்கள்! உங்கள் ஜகாத் ஃ பித்ரா , குர்பானி ,தர்மங்கள் போன்றவற்றை வீணாக்கி விடாதீர்கள்!
நாங்கள் மட்டும் தான் பரிசுத்தவாதிகள் என்றும் பேசும் இவர்கள் தான் இவாறு செய்துள்ளார்கள் .சகோதரரர்களே சிந்தியுங்கள் இவர்களை நம்பியா "நேந்து விட்ட ஆடு " என்பார்களே அதே போன்று குருட்டுத்தனமாக அவர்களை பின்பற்றி செல்வீர்கள். சிந்தியுங்கள்
நன்றி
இப்னு ஹுசைன்