அநியாயக்காரர்கள் நியாயத் தீர்ப்பு நாளுக்கு அஞ்சட்டும்! ( பார்க்க 56:51-57)
மார்க்க மற்றும் நீதிமன்றத் தீர்ப்புக்காக லஞ்சம் வாங்குபவரையும், லஞ்சம் கொடுப்பவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: அபூதாவூது. இப்னுமாஜா, நஸயீ, திர்மிதீ, அஹ்மது.
முஸ்லிம்கள் மீதுள்ள வெறுப்பால் அநியாயக்காரர்கள் பாபர் மசூதியை இடித்தனர். பாபர் மசூதி பள்ளிவாசல் சன்னி வக்பு வாரியத்திற்கு உரியது என ஆவணங்கள் இருந்தும் நியாயமற்றத் தீர்ப்பை வழங்கினர். நியாயத் தீர்ப்பு நாளையும், மறுமையையும் நம்பாத அவர்களிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது. படைத்தவனை விட்டு படைப்பினங்களை வணங்கும், காசே தான் கடவுள் என்ற கொள்கை உள்ளவர்களிடம் நம்மைப் படைத்தவனுக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை காண முடியாது. உலகிற்கு நீதியையும், நியாயத்தையும் போதிக்கும் இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றுவதாகச் சொல்லும் முஸ்லிம்கள், அதிலும் குறிப்பாக குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுவதில் நாங்கள் தான் நம்பர்1 என்று பீற்றிக் கொள்பவர்கள் முதலில் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். பின்பு அதை மற்றவர்களுக்கு உபதேசிக்க வேண்டும். என் மகள் ஃபாத்திமா திருடினாலும் கையை வெட்டுவேன் என்று நபி(ஸல்) கூறியதைக் கூறி இஸ்லாம் நீதியுடனும், நியாயத்துடனும் நடக்கச் சொல்கிறது என்று மாற்று மதத்தவர் கேள்விக்கு அந்தத் தலைவர் பதில் சொல்லி அதைக் கேட்டு அவரின் தொண்டர்கள் புளங்காகிதம் அடைந்தால் மட்டும் போதுமா? நியாயமாக நடந்து கொள்ள வேண்டாமா?
“இறை நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் அல்லாஹ்வுக்காகச் செயல்படுவோராகவும் நியாயத்தின் சாட்சிகளாகவும் ஆகிவிடுங்கள். ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை, நீங்கள் நீதி செலுத்தாமலிருக்க உங்களைத் தூண்டி விட வேண்டாம். நீங்கள் நீதி செலுத்துங்கள். அதுதான் பயபக்திக்கு மிகவும் உகந்ததாகும். அல்லாஹ்வை அஞ்சி ஆதரவு வையுங்கள். நீங்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான்” (அல்குர்ஆன் 5:8)
“உண்மைகள் எப்போதும் கசக்கும்; கசப்பாயினும் உண்மையைச் சொல்லிவிடு” என்ற நபி மொழியைப் பின்பற்றி இங்கே சில உண்மைகள்.
பள்ளிவாசல் பிரச்சனையில் நியாய, அநியாயங்கள் :
1. பாபர் மசூதி பள்ளிவாசல் வழக்குத் தொடுத்த சன்னி வக்பு வாரியத்திற்குச் சொந்தமானது என்பதற்கு உரிய ஆவணங்கள் இருந்தும், நீர்மோகி அகோரா, ராமஜன்மபூமி நியாஸ் என்ற அமைப்புகள் உரிமை கொண்டாடுகிறார்கள் என்பதற்காக அநியாயமான தீர்ப்பைக் கூறினார்கள். இது அயோக்கியத்தனம் என்றால் சிங்காரத் தோப்பு தவ்ஹீத் பள்ளிவாசல் JAQH என்ற அமைப்பிற்குச் சொந்தமானது என்பதற்கு உரிய ஆவணங்கள் இருந்தும் நீதிமன்றத்தில், இந்த பள்ளிவாசல் JAQH என்ற அமைப்புக்கு சொந்தமானது என்று தீர்ப்புக் கூறிய பின்பும் TNTJ விற்குத்தான் இந்த பள்ளிவாசல் சொந்தம் என்று உரிமை கொண்டாடுவது அயோக்கியத்தனம் இல்லையா?
2. உரிய ஆவணங்கள் வைத்திராத நீர்மோகி அகோரா, ராமஜன்ம பூமி நியாஸ் அமைப்புகளுக்கு இந்த பாபர் மசூதி உரிமை இருக்கிறது என்று சொன்ன அந்த தீர்ப்பு அநியாயமானது. இதை மாற்று மதத்தவர்கள் கூட கண்டித்திருக்கிறார்கள் என TNTJ பேச்சாளர்கள் பலர் பேசி வருகின்றனர்.JAQH அமைப்பு உரிய ஆவணங்கள் வைத்திருந்ததால் சிங்காரத்தோப்பு பள்ளிவாசல் JAQH அமைப்புக்கே சொந்தம் என்று தீர்ப்பு வந்திருக்கிறது. உரிய ஆவணங்கள் வைத்திராத TNTJ வாகிய நீங்கள் உரிமை கொண்டாடலாமா என்று மாற்று மதத்தைச் சார்ந்த போலீஸ் அதிகாரி கூட கண்டித்து நியாயத்தைச் சொன்னது உங்களுக்கு மறந்து விட்டதா?
3. தனக்கு உரிமையில்லாத, உரிய ஆவண மில்லாத பாபர் மசூதியைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக நீர்மோகி அகோரா, ராமஜன்மபூமி நியாஸ் போன்ற இந்து அமைப்புகள், இரட்டை வேடம் போட்டு நீதிமன்றத்தை ஏமாற்றியது அயோக்கியத்தனம் என்றால், தனக்கு உரிமையில்லாத, உரிய ஆவணமில்லாத சிங்காரத்தோப்பு தவ்ஹீத் பள்ளிவாசலைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் நாங்கள் தான் ஜாக் அமைப்பினர் என்றும் தவ்ஹீத் பள்ளிவாசல் கமிட்டி என்றும் இரட்டைப் பொய்முகம் காட்டி நீதி மன்றத்தை ஏமாற்றிப் பள்ளிவாசலைக் கைப்பற்றத் துடிப்பது அயோக்கியத்தனமில்லையா?
4. உரிய ஆவணங்கள் வைத்திருக்கும் சன்னி வக்பு வாரியத்திற்கு உரிமையான பாபர் மசூதி பள்ளிவாசலுக்குள் தொண்டர்கள், குண்டர்கள் புகுந்து கொண்டு அதை விட்டுத் தரமாட்டோம், ராமர் இங்குதான் பிறந்தார் என்பது எங்கள் நம்பிக்கை என்று கூறுவது அநியாயமென்றால்,
சிங்காரத்தோப்பு தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு உரிய ஆவணங்கள் வைத்திருக்கும் JAQH அமைப்பிற்குச் சொந்தம் என்ற தீர்ப்பு வந்தவுடன் சிங்காரத் தோப்பு தவ்ஹீத் பள்ளிவாசலில் TNTJ தொண்டர்களும், குண்டர்களும் எதற்கும் தயாராக இருந்து கொண்டு இதை விட்டுத்தர மாட்டோம். இந்த பள்ளிவாசல் எங்களுக்குச் சொந்தம் என்பது எங்களுடைய இயக்கத்தின் நம்பிக்கை என்று கூறுவது அநியாயம் இல்லையா?
5. முஸ்லிம்களை ஒழிக்கவும் பள்ளிவாசல்களை அழிக்கவும், பாபர் மசூதியை அபகரித்து அதை அரசியலாக்கி லாபம் தேடுவது அயோக்கியத் தனம் என்றால் SM பாக்கரையும், அவரது தொண்டர்களையும் ஒழிக்க, அவர்களுடைய ணூஹிவீமூ என்ற அமைப்பை ஒழிக்க ஒரு கேடுகெட்ட அரசியல்வாதியைப் போல் PJ குடும்பமும், அவரது தக்லீது தோழர்களும் தனக்கு உரிமை யில்லாத INTJ அமைப்பை அபகரித்தது அயோக்கியத்தனம் இல்லையா?
6. உரிய ஆவணங்கள் இருந்தும் சன்னி வக்பு வாரியத்திற்குப் பாதகமாக வழங்கிய தீர்ப்பு அயோக்கியத்தனம் என்றால் அந்நஜாத்திற்கு வாங்கிய சொத்தை அபூ அப்தில்லாஹ் தன் பெயரில் பதிவு செய்து கொண்டதால் அந்த துரோகத்தைத் தாங்க இயலாமல் நான் ஒரு வருடத்திலேயே அந்நஜாத்தை விட்டு வெளியேறிவிட்டேன் என்று அவதூறு வாக்குமூலம் சொன்னதற்கு உரிய ஆவணங்கள் இருந்தும், அபூ அப்தில்லாஹ் தன் பெயரில் பதிவு செய்து கொண்டதற்கு எந்த ஆவணமும் இல்லாததாலும், லஞ்சம் கொடுத்தும் வழக்கு விசார ணையின்போது நீதிபதியிடம் அளித்த வாக்கு மூலத்தில் “”நான் அப்படி சொல்லவே இல்லை; காவல் துறையினரே அப்படி எழுதிக் கொண் டனர்” என்று நீதித் தண்டனைக்குப் பயந்து பின் வாங்கிய இந்த PJ என்ற யோக்கியர்(?) அயோக்கியத்தனத்திற்கு எதிராக நீதிமன்றத்தை எதிர்த்து முற்றுகைப் போராட்டம் நடத்துகிறாராம். இது சிரிப்பை வரவழைக்கும் வேடிக்கை இல்லையா?
7. காலங்காலமாக சுன்னத்வல்ஜமாஅத்தினரின் நிர்வாகத்தின் கீழ் SP பட்டினம் பள்ளிவாசல் இருந்தாலும், அப்பள்ளியை சுன்னத்வல் ஜமாஅத்திற்கு வக்பு செய்தவர் இப்போது எங்கள் TNTJ இயக்கத்தில் இணைந்து முன்பு வக்பு செய்ததை, எங்களுக்கு எழுதித் தந்துவிட்டார். அதனால் சுன்னத்வல்ஜமாஅத்திற்கு உரிமையில்லை என்று நியாயம் பேசும் இவர்கள் JAQH பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கும் JAQH அமைப்பிற்கு சொந்தமான மேலப்பாளையம், கடையநல்லூர் மற்றும் திருச்சியிலுள்ள பள்ளிகளைக் கைப்பற்றி வைத்திருக்கும் TNTJ யினருக்கு ஒரு நீதி! மற்றவர்களுக்கு ஒரு நீதியா?
8. நான்கு மத்ஹபுகளைப் பின்பற்றும் சுன்னத் வல்ஜமாஅத் என்று எழுதிப் போட்டிருக்கும் பள்ளிவாசல்களில் நுழைந்து அவர்களுடைய நிர்வாகத்திற்கு எதிராகப் பிரச்சனை செய்வதும், திருவிடைச்சேரி பள்ளிவாசலில் இரண்டு உயிர்ப் பலி ஆவதற்குக் காரணமாக இருந்ததும் நியாயமான செயலா?
சிங்காரத்தோப்பு தவ்ஹீத் பள்ளிவாசலின் வெளியே TNTJ நிர்வாகத்தில் தலையிடாமல் குர்ஆன், ஹதீஸ் சம்பந்தமாக நோட்டீஸ் கொடுப்பவர்களைத் தடுப்பதும், கெட்ட வார்த்தையால் திட்டுவதும் தவ்ஹீத்வாதிகளின் செயலா?
9. உங்களுடைய தவ்ஹீத் பள்ளிவாசலில் மற்றவர்களை நோட்டீஸ் கொடுக்க நீங்கள் அனுமதிப்பதில்லை என்றால் நோட்டீஸை ஏன் எங்கள் பள்ளியில் கொடுக்கிறீர்கள் என்று சுன்னத் வல்ஜமாத் பள்ளி நிர்வாகம் கண்டித்தால் இவர்கள் எங்கே போய் தாவா செய்வார்கள்? இதை இவர்கள் நியாயம் என்பார்களா? அநியாயம் என்பார்களா?
10. சிங்காரத்தோப்பில் உள்ள இந்த பள்ளிவாசலுக்கு எந்தச் செலவும் செய்யாத நீங்கள் ஏன் நோட்டீஸ் கொடுப்பதற்காக மட்டும் வருகிறீர்கள் என்று கேட்கும் TNTJ யினர் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து சுன்னத் வல்ஜமாஅத் பள்ளிவாசல்களுக்கும் செலவுக்குப் பணம் கொடுத்து விட்டுதான் நோட்டீஸ் கொடுக்கிறார்களா?
11. பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள நம் சகோதரர்கள் தொழுகை நடத்திய பாபர் மசூதி நிலத்தை ஒரு அடிகூட காஃபிர்களுக்கு விட்டுத் தரமாட்டோம் என்று நீங்கள் கூறுவது நியாயம்தான். ஆனால் சிங்காரத்தோப்பு தவ்ஹீத் பள்ளிவாசலில் உங்களோடு சேர்ந்து தொழும் முஸ்லிம் சகோதரனுக்கு மார்க்கப் பிரச்சாரம் சம்பந்தமான நோட்டீஸ் கொடுக்க பள்ளிவாசலின் ஒரு படியைக்கூட TNTJ வாகிய நீங்கள் விட்டுத்தர மாட்டோம் என்று சொல்வது நியாயமா?
12. பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள ஷிர்க், பித்அத் நடந்த பாபர்மசூதி பள்ளிவாசல் விஷயத்தில் இது அல்லாஹ்வுடைய பள்ளி என்ற உரிமையுடன் நியாயம் கேட்டுப் போராடுகிறீர்கள் என்றால், ஷிர்க், பித்அத் இல்லாத JAQHக்குச் சொந்தமான தவ்ஹீத் பள்ளிவாசலில் அல்லாஹ்வுடைய பள்ளி என்ற அடிப்படையில் பள்ளிக்கு வெளியே நோட்டீஸ் கொடுக்க உரிமையில்லையா?
“”நீங்கள் உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள், உண்மையை நீங்கள் நன்கறிந்து கொண்டே (அதை) மறைக்கவும் செய்யாதீர்கள். (அல்குர்ஆன் : 2:42)
“நீங்கள் நெறிநூலைப் படித்துக்கொண்டே உங்களை மறந்துவிட்டு, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு நீங்கள் ஏவுகின்றீர்களா? (இதனை) நீங்கள் விளங்கிக் கொள்ள மாட்டீர்களா?” (அல்குர்ஆன் : 2:44)
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? (அல்குர்ஆன் : 61:2)
நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது. (அல்குர்ஆன் : 61:3)
பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள், எனினும் நிச்சயமாக இது உள்ளச்சம் உடை யோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாக வேயிருக்கும். (அல்குர்ஆன் : 2:45)
(உள்ளச்சமுடைய) அவர்கள் தாம், “”திட மாக(தாம்) தங்கள் இறைவனைச் சந்திப்போம்; நிச்சயமாக அவனிடமே தாம் திரும்பச் செல்வோம்” என்பதை உறுதியாகக் கருத்தில் கொண்டோராவர். (அல்குர்ஆன் : 2:46)
(சொல்லொன்று செயலொன்று என செயல்படும் நயவஞ்சகர்களாகிய) இவர்கள் தங்களுடைய (பொய்ச்) சத்தியங்களைக் கேடயமாக வைத்துக் கொண்டு, அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களைத்) தடுத்தும் வருகின்றனர்; நிச்சயமாக இவர்கள் செய்து கொண்டிருப்பது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் : 63:2)
இது நிச்சயமாக இவர்கள் நம்பிக்கை கொண்டு பின் நிராகரிப்போர் ஆகிவிட்ட தனாலேயாகும். ஆகவே இவர்களின் இதயங்கள் மீது முத்திரையிடப்பட்டு விட்டது; எனவே அவர்கள் விளங்கிக் கொள்ளமாட்டார்கள். (அல்குர்ஆன் : 63:3)
இவர்களை நீங்கள் பார்த்தால், இவர்களுடைய உடல்(அமைப்பு)கள் உங்களை ஆச் சரியப்படுத்தும்; அன்றியும் இவர்கள் பேசினால் இவர்களுடைய பேச்சை நீங்கள் (கவ னித்துக்) கேட்பீர்கள்; எனினும் இவர்கள் (நேர்மையானவர்கள் அல்லர், சுவரில்) சாய்த்து வைக்கப்பட்ட மரங்கள் போன்று இருக்கின்றனர். ஒவ்வொரு சப்தமும் தங்களுக்கு எதிரானது என்று எண்ணுகிறார்கள். இவர்கள் தாம் (நேர்வழி நடப்போருக்கு) பகைவர்கள்; ஆகவே இவர்களிடம் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்; அல்லாஹ் இவர்களை அழித்து விடுவான்; இவர்கள் (சத்தியத்திலிருந்து) எங்கு செல்கின்றனர்? (அல்குர்ஆன் : 63:4)
இந்துத்துவா பயங்கரவாதி சுவாமி அசிமானந்தாவுக்கிருக்கும் மன உறுத்தல், மனசாட்சி, இறையச்சம் கூட புதிய மத்ஹபு இமாமுக்கு இல்லாதிருப்பது வேதனையான விடயமாகும்! மறுமையைப் பற்றி உறுதியான நம்பிக்கையும், இறைவனைப் பற்றிய அச்சமும் இருக்கும் முஸ்லிம்கள் இவ்வாறு சொல்லொன்று செயலொன்று என அசாத்தியத் துணிச்சலுடன் நடக்கவே முடியாது. காரணம் நாளை மறுமையில் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பவே முடியாது!
எப்படியும் நமக்கு இந்த பள்ளி சொந்தம் இல்லை என்பதை உணர்த்து இவர்கள் திருச்சி பாலக்கரையில் தனி டிரஸ்ட் ஆக இயங்கிய தௌஹீத் பள்ளியை தங்கள் மாநில டிரஸ்ட்க்கு வலுகட்டாயமாக மாற்றி கொண்டனர் இதை அனைவரும் அறிவர் .
நன்றி
ANNAJATH