Friday, February 25, 2011

பெரியாருக்கு புகழ்பாடும் 'மேலாண்மை'; நடவடிக்கை எடுக்க பி .ஜே .வுக்கு துணிவுண்டா..?


பெரியாருக்கு புகழ்பாடும் 'மேலாண்மை'

நடவடிக்கை எடுக்க பி .ஜே .வுக்கு துணிவுண்டா..?


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

''தான் நல்லவன் என்பது தன்னம்பிக்கை; தான் மட்டுமே நல்லவன் என்பது தலைக்கனம்' அப்படிப்பட்ட தலைக்கனம் கொண்ட தலைவர் அண்ணன், தன்னையும், தனக்கு தலையாட்டும் தம்பிகளையும், தனது ஜமாஅத்தையும்  தான் நேர்வழியில் உள்ளவர்கள் என்றும், மற்றவர்கள்  எல்லாம் கொள்கையில் இருந்து தடம் புரண்டவர்கள் என்றும் பட்டியல் போடுவார். அதோடு, எங்கள் ஜமாத்தில் தவறு செய்பவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தூக்கிப் போட்டுவிடுவோம் என்று தூக்கலாக வீர வசனமும் அவ்வப்போது பேசுவார். ஆனால்  உண்மை நிலை என்ன?
'ஒய்யாரக் கொண்டையிலே தாழம் பூவாம்; அதன் உள்ளே இருப்பதெல்லாம்  ஈரும் பேனாம்' என்றான் ஒரு கவிஞன். அதுபோல கொள்கை உறுதி- குருதி உறுதி எல்லாம் சாமான்யனுக்குத் தானேயன்றி, மேல்மட்டத்திற்கு அல்ல என்பதுதான் அண்ணன் ஜமாத்தின் நிலை. இதை நாம் சும்மா சொல்லவில்லை. சில நாட்களுக்கு முன்னாள் வளைகுடா நாடு ஒன்றிருந்து ஒரு சகோதரர் நமக்கு  ஒரு நூலை அனுப்பி, சில விவரங்களையும் தந்திருந்தார். அண்ணன் ஜமாத்தின் உள்ளே- வெளியே விவகாரங்களை உறுதியுடன் எழுதும் நீங்கள் இதுபற்றியும் எழுதவேண்டும் என்று கூறியிருந்தார். அவர் கூறிய தகவல் அடிப்படையிலும், அவர் அனுப்பிய நூலை ஆதாரமாக கொண்டும் கீழே உள்ள விபரங்களை தருகிறோம்.
செல்வம் கொழிக்கும் வளைகுடா நாட்டின் அண்ணன் ஜமாஅத்தின் மேலாண்மை பதவி வகிக்கும் ஒரு கொள்கைக்குன்று. அந்த நாட்டில் நாத்திகர்களால் நடத்தப்பட்ட முப்பெரும் விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழக நாத்திக தலைவரின் கரத்தால் விருது பெற்றுள்ளார். எதற்காக தெரியுமா? நடைபெற்ற அந்த நாத்திக  விழாவுக்கு களப்பணிஆற்றியமைக்காக!
ஓரிறைக் கொள்கையே உயிர்மூச்சு என்று சொல்லிக்கொள்ளும் அண்ணன் ஜமாத்தின் மேலாண்மை, கடவுளே இல்லை என்ற கொள்கையுடைய அந்த விழாவில் என்ன களப்பணியாற்றியது? எதற்காக விருது வாங்கியது?  என்பதை அண்ணன் தான் விளக்கவேண்டும்.
இதோடு நிற்கவில்லை அந்த மேலாண்மை! அந்த விழாவையொட்டி ஒரு மலர் வெளியிடப்பட்டது. அந்த மலரில், 'கடவுள் இல்லை; கடவுளை கற்ப்பிப்பவன்  காட்டுமிராண்டி; கடவுளைக் கற்ப்பிப்பவன்  முட்டாள் என்ற கொள்கையை விதைத்த பெரியாருக்கு புகழ்மாலையை 'வாழ்த்து' என ஒரு பக்கம் தீட்டுகிறது அந்த மேலாண்மை. அது கீழே;
''விருதுகள் பல பெற்றாலும் பெரியார் விடுதலைக்காகவே பாடுபட்டார். இன்று சிலர் விருதுகளுக்காகவே  விலை போகின்றனர்.
இந்தியத் தலைவர்களிலேயே எவராலும் எட்டமுடியாத  வெற்றியை  எட்டிப்பிடித்தவர்.[அண்ணன் அவுட்]
அடிமை என்று மிரட்டிய ஆதிக்க சக்தியின் ஆணவத்தை புரட்சியால் புரட்டி போட்டவர்[ அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் அடிமையினத்தை ஒழிக்கவில்லையா?]
பெரியார் அவர்கள் கடைத்தெருவில் பன்னிரண்டுவயது ராமசாமியாக இருந்தபோது செய்த விதண்டாவாதங்களால் ஏற்பட்ட பிரம்மாண்டம்தான் இன்றைய சுயமரியாதை இயக்கம்.[அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் சுயமரியாதையை மண்ணில் விதைக்கவில்லையா?]
கட்டிய வீட்டிற்குள் ஒட்டிய நூலாம்படையை எட்டியே உதைத்திட்டார் ஈரோட்டு பெரும்படை.
தீப்பொறி பறக்க வைத்த தர்க்கங்கள் எதிராளிகளைக் கூட ரசிக்கவைத்தது. [பெரியாரின் தர்க்கங்களை அண்ணனும் ரசித்தாரோ?]
பெரியாரின் கைத்தடி பேரினவாதத்திற்கு பெரும் இடி; தமிழனுக்கே நீதான் தாய் மடி. [ஒட்டுமொத்த தமிழ் முஸ்லிம்களுக்கு, குறிப்பாக அண்ணனுக்கும் பெரியார்தான் தாய் மடியோ?]
உன்னால்தான் தழைத்தது தமிழ்குடி [அண்ணனையும் சேர்த்துதானோ]
அப்படிப்பட்ட தந்தை [?] பெரியார் அவர்களின் இந்த 132  வது பிறந்த நாள் விழாவில் [அண்ணனுக்கு பிறந்த நாள் கொண்டாட  முன்னோட்டமோ?]
அவரின்  உண்மைத்தொண்டன் ........பெரியார் திரு.....................அவர்களுக்கு வழங்கப்படும்............... சமூக நீதி விருது சாலப்  பொருத்தமானது.
[மேலாண்மை வாழ்த்தும் இந்த விருது பெரும் நபர், நாத்திக புத்தகங்களை கொண்டு நூலகம் நடத்துபவர் என்பதும், அவரது நாத்திகப் பிரச்சாரத்தை மெச்சியே விருது வழங்கப்படுகிறது என்பது  குறிப்பிடத்தக்கது]
அய்யா........[விருது பெறுபவர்] செய்துவரும் இப்பணி [ கடவுள் மறுப்புப் பணி] மேலும், மேலும் சிறப்புற்று தொடர்[?] தொண்டாற்ற என்றும் வாழ்த்துகிறோம்.
இவன்.......
என்ன படித்தீர்களா? அண்ணன் ஜமாஅத்தின் கொள்கை உறுதியை..? ஒருவர் செய்வதற்கு ஒரு ஜமாத்தை குறை கூறலாமா? என்று சிலர் நினைக்கலாம். மேற்கண்ட செயலை மேலாண்மை செய்து சுமார் நான்கு  மாதங்கள் கடந்த பின்னும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், மேலாண்மையின் செயலை சமந்தப்பட்ட வளைகுடா நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்பது தெரிகிறதல்லவா?
எனவே இப்போதும் சொல்கிறோம் அண்ணனுக்கு துணிவிருந்தால் இந்த மேலாண்மையை அடிப்படை  உறுப்பினரிலிருந்து நீக்கத் தயாரா? அதை உணர்வில் அறிவிக்கத் தயாரா? முடியாது. ஏனெனில், இந்த மேலாண்மை கருவேப்பிலை அல்ல எடுத்து வீசுவதற்கு; அண்ணன் ஜமாஅத்தின் 'எண்ணை வயல்' என்று கூறுகிறார்கள் சில  சகோதர்கள்.
எண்ணைவயலை  விட ஏகத்துவமே முக்கியம் என்று அண்ணன், மேலாண்மையை நீக்கிக் காட்டுவாரா? இல்லை 'நீக்குப் போக்காக' நடந்து கொள்வாரா என எதிர்பார்ப்பதோடு, இந்த மேலாண்மை பற்றி இதுவரை தனக்கு தெரியாது என்று அண்ணன் கூறினால், இந்தவிஷயத்தை அமுக்கிய சம்மந்தப்பட்ட வளைகுடா  நிர்வாகிகள் மீது என்ன நடவடிக்கை என்றும் அண்ணனை நம்பும் மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
குறிப்பு: சிவப்புக் கலரில் உள்ளவைகள் நமது கருத்துக்கள்.
 -அப்துல்முஹைமீன்                                                  
                                                                                                                 நன்றி
                                                                                  பழைய தௌஹீத் தொண்டன்

No comments:

Post a Comment