ஆயிரம் மாதங்களுக்கு இணையான ஒரு மாதம் ரமலான் மாதம். இம்மாதம் அருட்கொடை நிறைந்த மாதம். பல்வேறு அமைப்புகள், தன்னார்வு நிறுவனங்கள், மதரஸாக்கள் தங்களின் பொருளாதார தேவைகளை. மக்களிடம் எடுத்துரைக்க பல்வேறு பள்ளிவாசலில் ஜும்ஆ பயானை கேட்டு வாங்கி தங்களது பணிகளை எடுத்துரைக்கிறார்கள்.
இவ்வாறு பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரியின் அருகிலுள்ள பிரபலமான பள்ளிவாசல் மிலிட்டரி லைன் பள்ளிவாசல். இப்பள்ளியில் புதிதாக இஸ்லாத்தை ஏற்ற மக்களுக்கு அடிப்படை இஸ்லாமிய கல்வியைபயிற்றுவிக்கும் மதரஸா வின் சார்பில் 12/08/2011 அன்று ஜும்ஆ பயான் நடத்தினர்.
இந்த ஜும்ஆ பயானில் மதரஸா பற்றிய தகவல்களையும் அதன் பொருளாதார தேவைகளையும் சிறப்பாக எடுத்து வைத்தனர். ஜும்ஆ நிறைவடைந்தவுடன் மதரஸாவிற்கு தேவையான பொருளாரதார உதவியை பெற்றனர் அந்த மதரசாவின் ஆலிம்கள்.
இதனை அறிந்த TNTJ வின் பாளை நகரத் தலைவர் செய்யது என்பவர் தங்களது அமைப்பிற்கும் இதுபோல ஒரு வாய்ப்பு தரவேண்டும் என்று கண்ணியமான முறையில் கேட்காமல், மிலிட்டரி லைன் பள்ளி நிர்வாகிகளை பள்ளியினுள் புகுந்து தவறான சொற்களால் பேசினர் அந்த தவ்ஹித்வாதிகள்.
இதனை அறிந்த TNTJ வின் பாளை நகரத் தலைவர் செய்யது என்பவர் தங்களது அமைப்பிற்கும் இதுபோல ஒரு வாய்ப்பு தரவேண்டும் என்று கண்ணியமான முறையில் கேட்காமல், மிலிட்டரி லைன் பள்ளி நிர்வாகிகளை பள்ளியினுள் புகுந்து தவறான சொற்களால் பேசினர் அந்த தவ்ஹித்வாதிகள்.
இதனால் அனுமதி தர மறுத்த அந்த பள்ளி நிர்வாகிகளின் வாகனங்களை சேதப்படுத்தியது மட்டுமின்றி, அந்த பள்ளியின் நிர்வாகிகளை கொன்றுவிடுவதாக கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்தை அறிந்ததும் மற்ற சமுதாய இயக்கத்தின் உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பள்ளியின் முன் அராஜகம் பண்ணிய இந்த TNTJ வின் மீது காவல்துறையிடம் புகார் அளித்தனர். TNTJ மீது தக்க நடவடிக்கை எடுப்போம் என காவல்துறையினர் உறுதியளித்தனர்.
மறுபடியும் அடுத்த நாள் வந்து எப்படி போலீசிடம் புகார் அளிக்கலாம் என்று வயதான பள்ளி நிர்வாகிகளை தாக்கி உள்ளனர்.அவர்கள் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
கடந்த ரமலான் மாதத்தின் சங்கைமிகு இறுதி பத்தில் திருவிடைச்சேரி பகுதியில் பள்ளிவாசல் பிரச்சனையில் ஜமாத்தார்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தி கொலைவெறி தாக்குதல் நடத்தினர் TNTJ வினர். இதனால் அப்பகுதியை சேர்ந்த இரண்டு முஸ்லிம்கள் வபாத்தானார்கள். இவ்வாண்டு பாளை மிலிட்டரி லைன் பள்ளிவாசலில் தனது அராஜக போக்கை கையாளுகின்றனர்.
ஏகத்துவத்தின் பெயரால் பல வருடங்களாக முஸ்லிம்களிடமும், பள்ளிவாசல்களிலும் பிரச்சனைகளை ஏற்ப்படுத்துவதுதான் உண்மையான தவ்ஹீதா?
No comments:
Post a Comment